சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்:
சிலப்பதிகாரம்,தமிழில் எழுதப்பட்ட ஒரு பழமையான காப்பியம் ஆகும்.ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம் ,மணிமேகலை ,சீவகசிந்தாமணி,வளையாபதி ,குண்டலகேசி போன்றவை ஐம்பெங்காப்பியம் ஆகும். அவற்றில் முதல் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தினை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவர்.சிலப்பதிகாரம் மூன்று காண்டமும் 30காதையும் கொண்டுள்ளது. சிலப்பதிகாரத்தில்மூன்றுகாண்டம் கொண்டுள்ளது அவை,
1. புகார் காண்டம்
2. மதுரைக் காண்டம்
3. வஞ்சிக்காண்டம்
போன்றவை கொண்டுள்ளது புகார் காண்டம் 10 காதையும்,மதுரைக்காண்டம் 13 காதையும், வஞ்சிக்காண்டம் 7 காதையும் கொண்டுள்ளது என முப்பெரும் காண்டங்களைக் கொண்டுள்ளது. பத்தினிப் பெண்ணின் பெருமையை பேசக்கூடிய காவியமாக இது விளங்குகிறது.
சேரர், சோழன், பாண்டியர் போன்ற மூவேந்தர்களின் பெருமைகளை எடுத்துக் கூறுகிறது மேலும் இது
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து ஊட்டும் என்பதும்"
ஆகிய மும்பெரும் உண்மைகளை விளக்கக் கூடியதாக அமைந்துள்ளது .இது முத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படுகிறது ஏனெனில் இது இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழையும் உள்ளடக்கம் செய்து உள்ளது
சிலப்பதிகாரத்தின் முக்கியமான சிறப்பு அம்சங்கள்:
முத்தமிழ் காப்பியம் :
இயல்,இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் கொண்டிருப்பதால் இது முத்தமிழ் காப்பியம் ஆகும்.
இரட்டைக்காப்பியம்:
சிலப்பதிகாரமும் மணிமேகலை இரட்டைக்காப்பியம் ஆகும்.
இயற்கை வாழ்த்து:
திங்கள், ஞாயிறு, மழை போன்ற வாழ்த்தி தொடங்கியுள்ளார்.
பெயர் காரணம்;
சிலப்பின் மையமாக கொண்டு உள்ளதால் சிலப்பதிகாரம் என பெயரை கொண்டுள்ளது.
காலம்:
சிலப்பதிகாரம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.